Monday, August 16, 2010

பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கொலரா


Virakesari.
பாகிஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கொலரா நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையினால் இது வரை 1600 பேர் பலியாகியுள்ளனர் .

வீடுகள் மற்றும் தம் உடைமைகளை இழந்து மக்கள் துன்பப்படுகின்றனர். சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக ஐக்கியநாடுகள் சபை மதிப்பீடு செய்திருக்கின்றது.

ஆனால் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வெள்ளப்பகுதியில் கொலரா மற்றும் தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளன. சுவாத் பள்ளத்தாக்கில் கொலரா நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார். அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட ஐக்கியநாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று பாகிஸ்தான் வருகை தர உள்ளார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment