Virakesari.
கையடக்கத் தொலைபேசி சந்தையில் அதிகரித்துவரும் அப்பிளின் ' ஐ போன் ' வகை தொலைபேசிகளின் ஆதிக்கத்தை கருத்தில் கொண்டும் சந்தையில் இழந்துவரும் தங்களது இடத்தினை மீண்டும் தக்கவைத்துகொள்ளும் நோக்குடனும் பல்வேறு நிறுவனங்கள் தமது நவீன கையடக்கதொலைபேசிகளை வெளியிட்டு வருகின்றன.
இந் நிலையில் ஆர்.ஐ.எம் நிறுவனம் தனது புதிய பிளக்பெரி கையடக்கதொலைபேசியை நேற்று அறிமுகம் செய்தது.
ஆர்.ஐ.எம் என்றறியப்பட்ட 'ரிசேர்ச் இன் மோசன்' நிறுவனம் கனடா நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு மற்றும் கம்பி இல்லா சாதன தயாரிப்பு நிறுவனமாகும். மேற்படி நிறுவனமே தற்போது பிளக்பெரி கையடக்கதொலைபேசிகளை உருவாக்கி வருகின்றது.
' பிளக்பெரி டோர்ச் 9800 ' என இப் புதிய கையடக்கதொலைபேசி பெயரிடப்பட்டுள்ளது.
மேற்படி கையடக்கதொலைபேசியை கடந்த 18 மாதகாலமாக அந் நிறுவனம் உருவாக்கி வந்தது.
மேற்படி தொலைபேசியானது அந்நிறுவனத்தின் 3வது தொடுந்திரையுடன் கூடிய வெளியீடு என்பதுடன் முதலாவது ' ஸ்லைட் அப் ' எனப்படும் மேல்நோக்கி தள்ளக்கூடிய அமைப்பினை கொண்ட வெளியீடாகும்.
மேலும் பிளக்பெரி ' ஒஸ் 6 ' எனப்படும் அதி நவீன இயங்கு தளத்தினை கொண்டியங்கவுள்ள முதலாவது கையடக்கத்தொலைபேசி இது என்பது குறிப்பிடத்தக்கது.
3.2'' எச்விஜிஎ + (480X360 பிக்ஸல்ஸ்) திரையுடன் கூடியதும், 3ஜீ, வை-பை பி.ஜீ.ன், ப்ளூடுத் மற்றும் ஜிபிஸ் ஆகிய வசதிகளையும் 5 மெகா பிக்ஸல் கமெராவையும் வீடியோ வசதியையும் கொண்டதாகும்.
512 எம்பி ஒபரேட்டிங் மெமரியை கொண்டுள்ளதுடன். 4 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டது மேலும் இதன் சேமிப்பு வசதி 16 ஜிபி வரை அதிகரிக்கப்படக்கூடியதாகும்.
இவ் வெளியீடானது அப்பிளின் ' ஐ போன் ' இற்குத் தகுந்த போட்டியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சவூதி அரேபியாவில் பிளக்பெரி கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளதும் ஐக்கிய அரபு இராஜ்சியமும் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் தமது நாடுகளிலும் பிளக்பெரிக்கான தடையை விதிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment