கால்கள் போன போக்கில் கவலையின்றி நடந்தேன்
சாலையின் வலப்புறத்தில் ஒரு அட்டை உற்றுப் படித்தேன்
"பறவைகள் விற்பனைக்கு" என பறைசாட்டி நின்றது
வேலை இல்லாத நேரத்தில் உள்ளே செல்வோம் என நுழைந்தேன்
பறவைகள் பலவிதமாக கூட்டுக்குள்
ஆங்காங்கே சில மனிதர்கள் அச் சிறைச்சாலைக்குள்
சிறைக்காவலனோ ஏலம் விட்டான் மனிதம் அற்றவனாக
ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைந்த அவைகளை
சட்டென்று திரும்பினேன் அந்தப் பெண்ணின் பக்கம்
ஏதோ ஒரு கூட்டை மட்டும் உற்று நோக்கினால்
வெறித்த பார்வையை உணர்தியது அவளின் இரு விழிகள்
நானும் நகர்ந்தேன் அந்தப் பக்கம்...
அழகிய இரு கிளிகள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது அவளிடம்
என்ன பேசுகிறது என அறிய சற்று காதை தீட்டினேன்
"நாலுபக்க இரும்புக் கூண்டுக்குள் நசுக்கப்பட்டிருக்கிறது
எங்கள் வாழ்நாளும் சுதந்திரமும்
பெண்ணே உன் போன்றவர்கள்தான் நாங்களும்
அழகுக்காக அடிமைப் படுத்தப்பட்டவர்கள்"
என்றது
யாரோ என் தலையில் ஓங்கி அடித்த வலியுடன்
இடத்தை விட்டு அகன்றேன் பெண்ணையும் கிளியையும்
கூண்டுக்குள் வைத்த சமூகத்தோடு கலந்தவனாக.......
No comments:
Post a Comment