Monday, August 02, 2010

பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1,100 பேர் உயிரிழப்பு

virakesari.

பாகிஸ்தானில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்து நூறு பேர் வரை உயிரிழந்துள்ளதுதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் அநேகமானோர் வட பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் 30,000 இராணுவ வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மோசமான பருவ பெயர்ச்சி காரணமாக பாகிஸ்தானின் வடமேற்கில் சில பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் மேலும் அடுத்த 24 மணி நேரமும் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment