நம்ம அறிந்ததுன்டா நீங்கள்???? பகுதியின் 2வது பதிப்பு இது. இந்தப் பதிப்பில் நாம் பார்க்க இருப்பது சுத்தம் பற்றிய தகவல்கள். சுத்தம் சுகம் தரும் இது எல்லோரும் கேட்ட ஒரு விடயம் தான். ஆனால் செயலில் உள்ளவைகள் மிகவும் குறைவு. நாம் இன்று நம்முடைய சுகம் பற்றி அலட்டிக் கொள்ளமல் வாழ்ந்து வருகிறோம். இதனால் நாம் பல நோய்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உட்தள்ளப்பட்டிருக்கிறோம்.(டெங்கு போன்றவைகள்).
ஏதோ நம்முடைய வீட்டை மட்டும் நம்முடைய பொருட்களை மட்டும் சுத்தம் செய்கின்ற நாம் நம் சுற்றுச் சூழலிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அது நமக்கும் பயனுள்;ளதாக அமையும்.
இன்று நாம் பார்க்கப்போகும் விடயம் இன்றய உலகில் தங்கள் நாடுகளை சுத்தப்படுத்தி வைத்திருக்கும் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள் பற்றித்தான். ஆனால் இதை அந்த நாட்டு அரசாங்கங்கள் மட்டும் செய்யவில்லை. அந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுடைய பொருப்புணர்சிதான் அவர்களின் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.
சரி வாங்க அந்த நாடுகளை பார்ப்போம்.
1. பின்லாந்து(Finland)
2. நோர்வே (Norway)
3. கனடா (Canada)
4. சுவீடன்(Sweedan)
5. சுவிர்ஸலாந்து (Switzerland)
6. நியுஸிலாந்து (Newzeland)
7. அவுஸ்திரேலியா (Australia)
8. அவுஸ்ரியா (Austria)
9. ஐஸ்லாந்து (Iceland)
10. டென்மார்க் (Denmark)
இது தான் அந்தப் பட்டியல். அந்த நாடுகளின் அரசாங்கத்திற்கும் அங்கு வாழும் மக்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதோடு நாமும் பொருப்புடன் வாழ்ந்தால் நம் நாடும் சுத்தமாகும்(எல்லா விடயங்களிலும்) என்ற தகவலோடு முடிக்கிறோம்.
No comments:
Post a Comment