அமெரிக்காவில் உலக வர்த்தக மையமிருந்த இடத்தில் பண்டைய கப்பல் ஒன்று புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை அகழ்ந்தெடுக்கும் பணியில் தொல்பொருள் துறை வல்லுனர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.
நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது கடந்த 2001ஆம் ண்டு அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் இரட்டை கோபுர கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.
அந்த இடத்திலிருந்த கான்கிரீட் குவியல்கள் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் அகற்றப் பட்டது.
அப்போது உலக வர்த்தக மைய கட்டிடங்கள் இருந்த இடத்தின் தரைப்பகுதிக்கு கீழே பண்டைய கப்பல் ஒன்றின் பாகங்கள் இருப்பது தென்பட்டது. இதையடுத்து அந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி துவங்கியது.
அமெரிக்காவை சேர்ந்த தொல்பொருள் ஆய்வு துறை வல்லுனர்கள் மெக்டொனால்டு மற்றும் மைக்கேல் பாப்பலர் அந்த கப்பலை வெளிக் கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டில், மன்ஹாட்டன் நகரை விரிவுபடுத்துவதற்காக, ஹட்சன் நதியின் சிறு பகுதியில், கழிவுகள் கொட்டப்பட்டு நிலமாக்கப்பட்டது. அந்த கழிவுகளில், இந்த கப்பலும் ஒன்று.
இது குறித்து மெக்டொனால்டு கூறியதாவது:கப்பலின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருக்கும் மரக்கட்டைகளின் உடைந்த பாகங்களை சமீபத்தில் கைப்பற்றினோம்.
அந்த மரக்கட்டை களை வைத்து, அதன் வயதை கண்டுபிடிக்கவுள்ளோம். இதை வைத்து கப்பல் எந்த ஆண்டில் கட்டப்பட்டதென்பதை கண்டுபிடித்து விடலாம்.தவிர கப்பலின் புதைபடிவத்தை படகு வல்லுனர்களின் துணையுடன் கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். கப்பல் குறித்து கிடைக்கும் தகவல்களை பதிவு செய்து வருகிறோம்.இவ்வாறு மெக்டொனால்டு கூறினார்.
No comments:
Post a Comment