
Virakesari.
முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில்கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தம்பதிகளின் புதல்வியான செல்ஷியா கிளிண்டன் தனது காதலரும் அமெரிக்காவின் பிரபல நிதி முதலீட்டாளருமான மார்க் மேஸ்வின்ஸ்கியை நேற்று மாலை திருமணம் செய்துகொண்டார்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஹட்சன் நதியோரத்திலுள்ள அஸ்டன் கோர்ட்ஸ் எனும் இடத்தில் இத்திருமணம் நடைபெற்றது.
சுமார் ரூ.25 கோடி செலவில் மிக ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெறுகிற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருமண வைபவத்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
'மார்க் மேஸ்வின்ஸ் மற்றும் செல்ஷியா வின் அழகிய திருமண வைபவத்தை பெருமையுடன் கண்டுகளித்தோம் என்றும் மார்க் எமது குடும்பத்தில் இணைவதையொட்டி நாம் மகிழ்ச்சி அடைகிறோம்' என கிளிண்டன் ஹிலாரி தம்பதியினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment