கூகுள் மூலமாக செயற்படும் செய்திகள் மற்றும் தகவல்களைச் சீன அரசு தணிக்கை செய்தமை தொடர்பாக கூகுள் நிறுவனம் கடும் ஆட்சேபம் தெவித்திருந்ததுடன் சீனாவை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இரு தரப்பினரும் இவ்விடயம் தொடர்பாக மௌனம் காத்து வந்தனர். கூகுள் நிறுவனத்தின் சேவை மற்றும் அவசியம் தொடர்பாக சீன வர்த்தக நிறுவனங்கள் சீன அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
உலகின் அதிக இணைய பாவனையாளர்களைக் கொண்ட சீனச் சந்தையை கூகுள் இழக்க விரும்பவில்லை. இந்நிலையில் சீன அரசாங்கம் அந்நாட்டில் கூகுள் இயங்குவதற்கான உரிமத்தைப் புதுபித்துள்ளது.
இவ்வாய்ப்பை கூகுள் உறுதி செய்ததுடன் அந்நிறுவனத்தின் பங்கு விலை 2.8 வீதத்தினால் உயர்வடைந்தது. இந்நிலையானது தற்காலிகமானது எனவும் கூகுள் மற்றும் சீன அரசாங்கத்திற்கிடையிலான பணிப்போர் தொடர்ந்து நிலவி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment