மும்பை துறைமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில், குளோரின் வாயு கசிந்த்ததில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சிலிண்டரில் அடைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு இன்று அதிகாலை 4.00 மணியளவில் கசிந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த மக்களுக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, சுமார் 60 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் துறைமுகம் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வாயு கசியத் தொடங்கியதும் பணியில் இருந்தவர்கள் அதை உடனடியாக தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த சிலிண்டர் மீது ஏராளமான சிலிண்டர்கள் இருந்ததால் அதை கண்டறியும் முன்னர் பலர் பாதிக்கப்பட்டு விட்டனர் என்று துறைமுக தலைமை தீயணைப்பு அதிகாரி உதய் தாட்கரே தெரிவித்தார்.
No comments:
Post a Comment