
பார்க்கும் போதே என் மனதில் கருனை,
அவர்களின் பெருந்தன்மையை.
அப்படியே வியந்தேன் அவர்களின் செயலை,
என் நாவு உச்சரித்தது இறைவனின் பெயரை
நன்றியுடன்.........
துனை வேண்டியவர்கள் அவர்களே-இன்று
துனை இல்லாமல் வீதி ஓரத்தில்........
அவர்களின் கருப்பு கண்ணாடி அடையாளப்படுத்தியது
அவர்களின் வாழ்கை இருளை...
அவர்களின் கையில் இருந்த சில்லறை
காட்டிக் கொடுத்தது அவர்களின் நிலையை-ஆனால்
அவர்களின் கைத்தடி தெளிவு படுத்தியது
அவர்களின் தன் நம்பிக்கையை
என் அவசர வாழ்கைப் பயணத்தில்
சற்று தரித்த தரிப்பிடம்
அந்த கைத்தடி மனிதர்கள் தான்
அவர்களுக்கு அருகில் நின்றே
நோட்டமிட்டேன்
அவர்களின் ஒவ்வொரு வினாடியையும்
என் நேரத்தில் அவர்களுக்காகவும்
சிறு நிமிடங்கள்......
நீர் இல்லாத கடல்,
மழை இல்லாத மண்,
முகில் இல்லாத வானம்,
நிலவு இல்லாத இரவு,
சூரியன் இல்லாத பகல்,
இப்படியே என் கற்பனை நீண்டது
கண் இல்லாத அந்த மனிதர்களை கண்டவுடன்
ஊனம் உடலில் இல்லை-என்று
வாயால் சொல்லி அமைதியடையும்
மனிதரிடையில்,
என் மனம் ஏற்க மறுத்தது இவர்களை
கண்டவுடன்
இவர்களை போலவே நானும் இருந்திருந்தால்.........
இன்று எனக்கு எந்த வலியும் இருந்திருக்காது
என்றும் என்னத் தோன்றியது அந்த தருனத்தில்.
இவர்கள் இழந்தது ஏராளம்.............
மழலையின் சிரிப்பு,
மலர்களின் நிறம்,
மங்கையின் அழகு,
மாலையின் வண்ணம்,
அருவியின் வளைவு,
சூரிய உதயம்................,
என்று என்னும் போது
இறைவனுக்கு மறுபடியும் நன்றி கூறியது
இவர்களை போல் என்னை படைக்காமல்
விட்டதற்கு..... சற்று இவர்களுக்கான
பரிவுடன்..........
5 ருபாய் போட்டுச் செல்லும் மனிதரிடையில்
500 ருபாய் தேடியது என் கண்கள்........
விழித்துக் கொண்டிருப்பவனையே ஏமாற்றும் இந்த உலகில்
இவர்களை.......
நினைத்தவுடன் சற்று தயங்கியது என் கைகள்
பேச வேண்டும் போலிருந்தது அவர்களுடன்
ஆனால் மொழி என்னை தடுத்தது....
ஆனால் என் உள்ளம் பேசியது வெயிலில்
நனைந்த அவர்களின் விழிகளோடு....
இதற்கு மேல் இங்கிருந்தால்- என்
விழி நனைந்து விடும் என்ற ஏக்கத்தில்
அங்கிருந்து புறப்பட்டேன்
நானும் 5 ருபாய் பட்டியலில் இணைந்தவனாக
கண் இருந்தும் கருனை இல்லாத ஊனமானவனாக......
என் பிராத்தனையில் இடம் பிடித்துக் கொண்டார்கள்
இந்த கைத்தடி மனிதர்கள்
No comments:
Post a Comment