
காரிருள் இரவு
சில்லென்ற பனிக் காற்று
அருகில் வெண்னிலவு
கற்பனையில் நான்
மனதில் உன் நினைவுடன்...
மெல்லிய இசை காதைத் துளைத்தது
இரவின் அமைதியை அது குலைத்தது
வசந்த காலத்தை நினைத்து நான்
ஒரு வெள்ளை காகிதத்தோடு...
ஊரின் உறவுகள், பழகிய நண்பர்கள்
என நினைக்க உறங்கிக் கொண்டிருந்த
என் நினைவுகளும் அலை மோதியது
அந்தப் பருவங்களை எண்ணி...
நிஜமாகவே அது வசந்த காலங்கள் தான்
இன்று என் மனம் தவியாய் தவிக்கிறது
அந்த நாட்களை மீண்டும் ஒரு முறை
வாழ்ந்து பார்க்க முடியுமா????????
பாடசாலை நாட்கள், பழகிய நண்பர்கள்,
சுற்றித் திரிந்த வீதிகள், வேட்டையாடிய வீதி மாங்காய்கள்,
வியர்வை சிந்த விளையாடிய மைதானங்கள்,
ஓர் இரவின் ஏக்கங்களாகிப் போனது.
பகிர்நது கொள்ள நண்பனுமில்லாமல்,
என்னை அரவனைக்க தாயுமில்லாமல்,
விடியப்போகும் இரவோடு என் இதயமும்
பேசியது என் பசுமைக் காலங்களை....
No comments:
Post a Comment