மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாயல் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலின் தலைவரும் மட்டக்களப்பு மஸ்லிம் வர்த்தகர் சங்கத் தலைவருமான பிலால் ஹாஜியாரின் வேண்டு கோளின் பேரில் கொழும்பிலுள்ள தனவந்தர் யாஸீன் பாய் என்பவரின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட இப்பள்ளிவாயலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹஸரத்தினால் திறந்து வைக்கப்பட்டு தொழுகை நடாத்தப்பட்டது.
இவ்வைபவத்தில் காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளன பிரதி நிதிகள், உலமாக்கள் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கித்சிறி பண்டார உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள மஸ்லிம் கைதிகள் தொழுவதற்கென இப்பள்ளவாயல் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆறு இலட்சம் ரூபா செலவில் இப்பள்ளிவாயல் நிர்மானிக்கப்பட்டுட்டுள்ளதாக பிலால் ஹாஜியார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment