
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் நோர்வே நாட்டு செஞ்சிலுவை சங்கத்தின்
உதவியோடு புதிய வைத்தியசாலை ஒன்று நவீன வசதிகளுடன் கட்டி நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைத்தியசாலை கடந்த 26.12.2004 இல் ஏறடபட்ட சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந் நிகழவில் நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நாயகம்,மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் காத்தான்குடியைச் சேர்ந்த பல பிரமுகர்களும் சுகாதர அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நோர்வே நாட்டு செஞ்சிலுவைச் சங்க செயலாளர் நாயகம் போர்ச் பிறவுண்டி, மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம்.சுபைர், இலங்கை செங்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் வசந்தராசா, காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவின் உப தலைவர் ராபி, காத்தான்குடி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நசுறுதீன் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.
இவ்வைபவம் இலங்கை செஞ்சிலுசை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் அப்துல்லா தலைமையில் நடை பெற்றது.இந்த வைத்தியசாலை நிர்மாணிப்பு பணிக்காக 616 மில்லியன் ருபா செலவிடப்பட்டதும் சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயம்.
No comments:
Post a Comment