அவமானமும் அடக்கமும் ஒட்டி உறவாடியது
என்னோடு
பரிதாபம் எனும் கண்கள் என்னை
பார்க்காத நாட்களே இல்லை
நிலவின் அழகை ரசிக்க கூட நிமிர்த்த வில்லை
என் பூமி பார்த்த தலையை
வானம் பார்த்தே பல வருடம் ஆயிற்று
மூன்று தசாப்தங்கள் கழிந்ததாம்
நான் பிறந்து நேற்றுடன்
யாரோ சொன்னார்கள்
இன்று என் காதுடன்
முன் வீட்டு முருகேஷ் அண்ணாவின் குழந்தை
என்னை பார்த்துதான் சோறுன்பான்
வெள்ளாடை அணிந்த நான் பேய் என்ற கிலியில்
அவனுக்குத் தெரியாது நான் ஒரு துணையற்ற கிளி என்று
கணவன் இறந்த நாளோடு
கருகி விட்டது என் இதயமும்
மனிதரில் நான் தான் அதிசயப் பிறவி
இதயமே மரித்தும் உயிர்வாழும் ஒரு ஈனப்பிறவி
கருகிய இதயத்தின் சாம்பலோடு
கரைத்து விட்டேன்
என் உடல் கொண்ட உணர்சிகளையும்
கண்ணீர் என்ற கடலில்..
அம்மாவோடு வாழ்ந்த 8 வருடங்கள்
அவள் இல்லாமல் வலியோடு வாழ்ந்த 10 வருடங்கள்
காதலோடு வாழ்ந்த 5 வருடங்கள்
மனைவியாய் வாழ்ந்த 2 வருடங்கள்
கடந்து-இன்று
தனிமையுடன் வாழும் 5 வருடம்
தொடர்கிறது..
நான் சிரித்து பல வருடம் ஆயிற்று
இப்போது சிரிக்கிறேன் என்பதை விட
நடிக்கிறேன்
பெண் என்ற பாத்திரத்தில்
விதவை எனும் சிறப்பு வேடம் எனக்கு
வலியை நீக்க ஒரு வழியில்லை
என் வாழ்வில்
வலியின் வரிசையில் எனக்கே முதலிடம்
உளி தாங்காத சிற்பம் இல்லை
வலி இல்லாமல் வாழ்கையில்லை..
விதியின் விதிமுறைக்கு நான் மட்டும்
விளக்கப்பட்டவளா?
தொடர்கிறது என் வாழ்வு
ஓயாமல் வீசும் தென்றல் போல.....
வலியை நீக்க ஒரு வழியில்லை
ReplyDeleteஎன் வாழ்வில்
வலியின் வரிசையில் எனக்கே முதலிடம்
//
விதவையின் வலி புரிகிறது.... வாழ்த்துக்கள்
நன்றி சரவணன்
ReplyDeleteதொடர்ந்து உங்களது விமர்சனம் எமக்கு வந்து சேரட்டும்